உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் ...
இதோ சில..
ஒரு மாலை, .
*********************************************
ஒரு இரவு
*********************************************
எந்த அழகான பெண்களும்,
அழகாக நடப்பது இல்லை..
அது தானே அழகு - நடை அழகு..
பெண்ணே ,
படைத்தவனுக்கு தெரியவில்லை ,
நாம் இருவரும் ஓர் உயிர் என்று
தனி தனியாக படைத்துவிட்டான்..
வா அவனுக்கு புரிய வைப்போம்
இருவரும் ஒன்றாய் சேர்ந்து..
என் பயணம் ,
என்னுடையது ,
எனக்கானது ,
யாரோ, சொல்வதால் நான் மாற்றினால்,
எப்படி என் பயணம் தொடரும் .."
பயணம் ,
இதில் தொடக்கமும் , முடிவும் ,
மிகவும் பரிசீலிக்கப் படுகிறது ..
தொடக்கம் ,
முடிவை உருவாக்குவதை போல ..
முடிவு ,
இன்னொரு தொடக்கத்தை உருவாக்குகிறது ..
-----------------------------------------------------------
Quote : The world is a book and those
who do not travel read only one page.
- St. Augustine
செய்தி : உலகம் ஒரு புத்தகம்,
பயணம் செய்யாதவர்கள்,
ஒரே ஒரு பக்கம் மட்டும் பயில்கின்றனர்.
-----------------------------------------------------------
அதலால்
முடிவெடுங்கள், தொடக்கங்கள் உண்டாகும்..
தொடங்குங்கள், முடிவுகள் ஜெயக்கட்டும்..
நான்
உன்னை காண அலைந்து திரிந்த போதெல்லாம்,
அமைதியாய் இருந்த என் மனம்...
உன்னை காண காத்து கொண்டிருக்கும்போது - மட்டும்
உன்னை தேடிக் கொண்டிருப்பதேன்...?
கலப்புத் திருமணம் செய்யுங்கள்,
இரண்டு ஜாதியில் மட்டும்,
அது , ஆண் பெண் . . .
கடவுளே எனக்கு அவள் தான் கடவுள்..
அவளுக்கு ஏதேனும் இன்னல் ஏற்பட்டால்,
உன் மேல் போர் தொடுப்பேன்..
இவ்வுலகை மீட்டு அவளிடமே கொடுப்பேன்..
உன்னை அவள் மண்ணிப்பால்..
அவளும் கடவுள் தானே..
நீயும் என்னை மண்ணிப் பாயாக...
நீயும் கடவுள் தானே..
நீ இல்லாமலும் நான் இல்லை ...
நீ இருந்தும் நான் இல்லை..
நீ என்னுள் இருப்பதனால்..
நானும் தெரிவதில்லை,
நீயும் தெரிவதில்லை..
நாம் என்று சேர்ந்தோம் என்றும் தெரிவதில்லை..
பிரிவில்லை என்று மட்டும் தெரிகறது!!!!!
நீயோ தீ..
நானோ நீ..
எரித்து விடாதே..!!
எறிந்துவிடுவோம்..!!
சில நேரங்களில் வார்த்தைகளை விட,
என் மௌனம் உண்மையானது, உறுதியானது..
அது பல நேரங்களில் புரியாதது..